ADDED : ஏப் 11, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலங்காயம்: திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அருகே பூங்குளத்தை சேர்ந்தவர் கலையரசன், 21. பேஸ்புக்கில், 9ம் வகுப்பு மாணவியுடன், பழகியுள்ளார். மாணவியின் போட்டோவை, நிர்வாணமாக மார்பிங் செய்து, மாணவியை மிரட்டி, தனிமையில் இருக்க அழைத்தார். மாணவி மறுத்ததால், அந்த போட்டோவை, நண்பர்களான ரஞ்சித், சந்தோஷ் மற்றும் இரு சிறுவர்களுக்கு அனுப்பினார்.
மாணவியின் பெற்றோருக்கு அனுப்புவதாக கூறி மிரட்டினார். மாணவி, தன் பெற்றோரிடம் தெரிவித்ததால், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகார்படி, கலையரசன், 21, ரஞ்சித், 20, சந்தோஷ், 20, மற்றும், 16 வயது சிறார்கள் இருவர் என, ஐந்து பேரை ஆலங்காயம் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.