/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாணவரின் பாட புத்தகத்தில் ஜாதி பெயரை எழுதிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
/
மாணவரின் பாட புத்தகத்தில் ஜாதி பெயரை எழுதிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
மாணவரின் பாட புத்தகத்தில் ஜாதி பெயரை எழுதிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
மாணவரின் பாட புத்தகத்தில் ஜாதி பெயரை எழுதிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ADDED : நவ 28, 2024 03:04 AM
ஜோலார்பேட்டை:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த குனிச்சி மோட்டூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு பணியாற்றும் ஆசிரியர் விஜயகுமார், கடந்த வாரம், புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்த பாடம் நடத்தியபோது, ஒரு இசைக்கருவியின் பெயரை குறிப்பிட்டு அந்த இசைக்கருவியை, குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பர் என கூறினார்.
தொடர்ந்து, ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில் மாணவரின் ஜாதி பெயரை குறிப்பிட்டு எழுதி, அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பேசினார். அந்த மாணவர் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறினார். இரண்டு நாட்கள் கழித்து ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை.
பின், குனிச்சி மோட்டூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, மாணவரின் ஜாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
மாவட்ட முதன்மை கல்விஅலவலர் புண்ணியக்கோடி, திருப்பத்துார் தாசில்தார் நவநீதம், கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து போரட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாணவரின் புத்தகத்தில் ஜாதி பெயரை குறிப்பிட்டு எழுதிய ஆசிரியர் விஜயகுமாரை நேற்று,'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.