ADDED : செப் 01, 2026 03:31 AM
அ நிறம் | அளவு
திருப்பத்துார்: பள்ளி மாணவியரை காரில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த ஜலால், 20, உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த, 18 வயது ஆட்டோ டிரைவர், 17 வயது வாலிபர், மற்றும், ஜலால், 20, ஆகியோர், தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும், 15, வயதுடைய மூன்று மாணவியரிடம் பழகினர்.
க டந்த, 28ல் பள்ளிக்கு சென்ற மாணவியர், வீடு திரும்பாததால், பெற்றோர் ஆம்பூர் போலீசில் புகார் தந்தனர். விசாரணையில், அன்றிரவு, 10:00 மணியளவில், பள்ளிகொண்டா அருகே மூன்று மாணவியர், ஆட்டோ டிரைவர் உட்பட, மூவரை சுற்றி வளைத்தனர்.
மாணவியரை காரில் கடத்தி, மூவரும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
