/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
வெல்டிங் தொழிலாளி டிராக்டர் ஏற்றி கொலை?
/
வெல்டிங் தொழிலாளி டிராக்டர் ஏற்றி கொலை?
ADDED : செப் 10, 2025 03:47 AM
ஆம்பூர்:வெல்டிங் தொழிலாளி டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குப்புராஜபாளையத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி சதீஷ், 22. இவர், பேரணாம்பட்டில், பணி முடிந்து தன் பைக்கில் நேற்று காலை, 9:30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, தட்டப்பாறை பகுதியிலிருந்து, வெங்கடசமுத்திரம் பாட்டூர் கிராமத்திற்கு விறகு ஏற்றி சென்ற டிராக்டர், சதீஷ் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். உமராபாத் போலீசார், டிராக்டர் டிரைவர் விநாயகம் என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், சதீஷின் உறவினர்கள், விபத்து ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் விநாயகத்திற்கும், சதீஷூக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால், திட்டமிட்டு டிராக்டரை ஏற்றி, சதீஷை கொலை செய்ததாகவும், விநாயகத்தை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆம்பூர் தாலுகா போலீசார், விநாயகத்தை கைது செய்தனர். உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர்.