ADDED : செப் 18, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் சுதா, 46. இவர், அப்பகுதியில் ஹாலோ பிரிக்ஸ் கற்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்திற்கு லாரியில் ஏற்றி வந்த எம்- சாண்ட் மணலை இறக்க லாரி கதவை தொழிலாளி சாமிக்கண்ணு, 50. திறந்தார். அப்போது லாரி கதவின் மேல் பகுதி அங்கிருந்த மின் கம்பத்திலிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதில், சாமிகண்ணு மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். வாணியம்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
