/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
/
மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
ADDED : டிச 14, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜமீர் அஹமத், 29, இவர் ஏழாம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, நேற்று முன்தினம் சென்று, பாலியல் தொல்லை கொடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் தாயிடம் மாணவி நடந்ததை கூறினார். இது குறித்து, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசில், மாணவியின் தாய் கொடுத்த புகார்படி, போலீசார் விசாரித்து போக்சோவில் ஜமீர் அஹமதுவை கைது செய்தனர்.

