நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு உஷாரா இருங்க ! திருப்பூர் புதிய எஸ்.பி., கடும் எச்சரிக்கை
நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு உஷாரா இருங்க ! திருப்பூர் புதிய எஸ்.பி., கடும் எச்சரிக்கை
ADDED : ஜூன் 02, 2011 01:13 AM
திருப்பூர் : ''நகை திருட்டில் ஈடுபடுவோர், அடகு கடையில் எளிதாக பணம் பெறுவதால், குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. தெரியாமல் திருட்டு நகையை பெற்றாலும், சட்டம் தெரியாது என்பதற்காகவும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்,'' என திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் நகை அடகு கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. எஸ்.பி., பாலகிருஷ்ணன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளைகளை தடுக்கவும், திருடர்கள் பயமின்றி மக்கள் வாழவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் போலீசாருடன் அடகு கடை உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக, இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, நகை கடை உரிமையாளர்கள் மற்றும் சிம் கார்டு விற்பனையாளர்களுக்கும் இக்கூட்டம் நடத்தப்படும். நகை திருட்டில் ஈடுபடுவோர் மற்றும் கொள்ளை சம்பவங்
களில் ஈடுபடுவோர், அடகு கடையில் எளிதாக பணம் பெறுவதால், குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. தெரியாமல் திருட்டு நகையை பெற்றாலும், சட்டம் தெரியாது என்பதற்காகவும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். குற்றச்செயல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமான திருட்டு மற்றும் மூன்றரை பவுன் கொள்ளையே பெரிய திருட்டுக்குள் வந்து விடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், 20 பவுன் திருட்டு போனால், அது பெருங்குற்றம். தற்போது, தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஐந்து பவுன் அல்லது மூன்றரை பவுன், வீடு புகுந்து கொள்ளை நடந்தாலே, உயரதிகாரிகள் கண்காணிப்புக்கு அவ்வழக்கு சென்று விடும். அடகு கடை உரிமையாளர்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும்; பதிவேடுகளை முறையாக பராமரிப்பதோடு, வரும் வாடிக்கையாளர் களின் மொபைல் போன் எண்களையும் பெற வேண்டும். அந்த எண் ணுக்கு, 'ரிங்' விட்டு , உண்மையானதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். 21 வயதுக்கு உட்பட்டோரிடம் அடமானம் பெறாதீர்கள். இளம் வயதிலேயே குற்றவாளி களாக மாறுபவர்களுக்கு ஏதுவான செயலாக இது மாறி விடும். பெரும் பாலான கடைகள் பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளன. கண்டிப்பாக, கடைகளில் ' சி.சி., 'டிவி' அமைக்க வேண்டும். இது, குற்றவாளிகளை எளிதாக அடையாளம் காண உதவும். மேலும், அலாரம் வசதியும் ஏற்படுத்த வேண்டும். குடும்ப செலவுக்கு பணம் தேவை யிருக்கும்போது, குடித்து விட்டு வந்து, மனைவியின் தாலியை அடமானம் வைப்பர். என@வ, குடிபோதையில் வருபவர்களுக்கு அடகு பணம் கொடுக்காதீர். யார் மீதும் சந்தேகம் ஏற்பட்டால் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்கலாம். போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். கடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யுங்கள்; அசம்பாவிதங்கள் நடந்தால் இழப்பீடு கிடைக்கும். பழைய குற்றவாளிகள் குறித்த விபரங்கள், போட்டோக்கள் வழங்குகிறோம். பட்டியலில் உள்ளவர்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுங்கள். ஓராண்டுக்கு மேல் நகை மீட்கப்படவில்லை என்றாலும் தகவல் கொடுங்கள். இவ்வழிமுறைகளை மேற் கொண்டால், திருட்டு சம்பவங்கள் தடுக்கப்படுவதோடு, திருட்டு நகை பெற்ற குற்றத்துக்காக நீங்களும் குற்றவாளிகளாக மாறுவது தடுக்கப்படும், என்றார். ஏ.டி.எஸ்.பி., (குற்றம்) பாஸ்கரன், டி.எஸ்.பி., ராஜாராம், இன்ஸ்பெக்டர்கள், திருப்பூரிலுள்ள 240 அடகு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
