/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் சாயப்பட்டறை பிரச்னை: தீர்வு காணக்கோரி 1,701 பேர் மனு
/
திருப்பூர் சாயப்பட்டறை பிரச்னை: தீர்வு காணக்கோரி 1,701 பேர் மனு
திருப்பூர் சாயப்பட்டறை பிரச்னை: தீர்வு காணக்கோரி 1,701 பேர் மனு
திருப்பூர் சாயப்பட்டறை பிரச்னை: தீர்வு காணக்கோரி 1,701 பேர் மனு
ADDED : ஜூலை 11, 2011 10:34 PM
திருப்பூர் : 'சாயப்பட்டறை பிரச்னைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்' என்ற கோரிக்கை மனுக்களுடன், தொழில் பாதுகாப்பு குழு சார்பில் 1,701 பேர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. தொழில் பாதுகாப்பு குழுவினர் சார்பில் அழைத்து வரப்பட்ட 1,701 பேர், சாயப்பட்டறை பிரச்னை குறித்து, கோரிக்கை மனுக்களுடன் காத்திருந்தனர். தகவலறிந்த கலெக்டர் மதிவாணன், அவர்களிடம் பிரத்யேகமாக மனுக்களை பெற்றார். மனுக்களை அளித்த பொதுமக்கள் பலர், 'வேலை வாய்ப்பு, வருவாய் இழந்த நிலையில், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற திண்டாடி வருகிறோம். குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. மோகன் கமிட்டியின் பரிந்துரை மற்றும் நடவடிக்கைகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது' எனக் கூறினர். கலெக்டர் மதிவாணன், 'தற்கொலை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சாயப்பட்டறை பிரச்னையில், அரசு அதிகாரிகள், தொழில் துறையினர், விவசாயிகள், தொழிலாளர்கள் என, பல தரப்பிலும் உரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. கோர்ட் தலையீடு உள்ளதால், எந்த தரப்பும் பாதிக்கப்படாத வகையில் தீர்வு காண, அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு ஏற்படுத்தி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வரும் தனி கவனம் செலுத்தி வருகிறார். வழங்கப்பட்ட மனுக்கள் குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காண முயற்சி செய்யப்படும்,'' என்றார்.