/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரதராஜபுரத்தில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
/
வரதராஜபுரத்தில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2011 01:57 AM
உடுமலை : உடுமலை-திருப்பூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பஸ்களும்
வரதராஜபுரம் கிராம பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோட்டமங்கலம் ஊராட்சி
முன்னாள் துணை தலைவர் கனகராஜன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள
மனு:வரதராஜபுரம் கிராமத்தில் நூற்பாலை, கறிக்கோழி நிறுவனத்தின் தீவன
உற்பத்தி உட்பட பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.
மேலும்,
மாநிலத்திலேயே தாலிக்கயிறு அதிகமாக உற்பத்தி செய்யும் கிராமமாகவும்
உள்ளது.எனவே நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பல்வேறு காரணங்களுக்காக
இக்கிராமத்திற்கு வருகின்றனர். சுற்றுப்பகுதியிலுள்ள குமாரபாளையம்,
முருங்கப்பட்டி மற்றும் தோட்டத்து சாளைகளில் வசிப்பவர்கள் பிற பகுதிகளுக்கு
செல்ல வரதராஜபுரத்தில் பஸ் ஏறுகின்றனர். உடுமலை மற்றும்
திருப்பூரிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் கிராமத்தில் நிறுத்தி பயணிகளை
ஏற்றவும், இறக்கவும் மறுக்கின்றன. இதனால், 2 கி.மீ., தூரத்திலுள்ள
குடிமங்கலம் நால்ரோட்டிற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோவை,
திருப்பூர், ஈரோடு, கோபி, மேட்டுப்பாளையம் உட்பட பகுதிகளுக்கு செல்லும்
பஸ்களை வரதராஜபுரம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல
நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் ரோட்டிலிருந்து தள்ளி அமைந்துள்ள
குமாரபாளையம் மற்றும் முருங்கபட்டி கிராமங்களுக்கு காலை மற்றும் மாலை
நேரத்தில் டவுன் பஸ்களை இயக்க வேண்டும். என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.