/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலம் கையகப்படுத்தும் பணி: முதல்வருக்கு மனு
/
நிலம் கையகப்படுத்தும் பணி: முதல்வருக்கு மனு
ADDED : செப் 25, 2011 01:08 AM
திருப்பூர் :பல ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ள ரயில்வே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, ஈரோடு- பழனி அகல ரயில்வே மக்கள் பணி சங்க பொதுச் செயலாளர் லிங்கம் சின்னச்சாமி முதல்வர் மற்றும் தமிழக எம்.பி.,களுக்கு மனு அனுப்பியுள்ளார்.மனு விபரம்: ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்களை உள்ளடக்கிய 91 கி.மீ., கொண்ட ஈரோடு- பழனி ரயில் பாதை திட்டம், 1952ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் கடந்த 2005ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் முதல் சர்வே செய்ய இரண்டு கோடி ரூபாய், இரண்டாவது சர்வேக்கு 79 லட்சம் ரூபாய், இறுதி சர்வே செய்ய 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இந்நிதியை கொண்டு திட்டத்தை நிறைவேற்ற முடியாது; 91 கி.மீ., ரயில்பாதை அமைக்க 700 கோடி ரூபாய் நிதி அவசியம். மத்திய, மாநில அரசுகள் திட்டத்துக்காக ஐம்பது சதவீத நிதி ஒதுக்க வேண்டும்; சென்னை மெட்ரோ ரயிலுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது; இத்திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்க தயக்கம் காட்டப்படுகிறது. ரயில் பாதையில் நிலம் கையகப்படுத்தப்படாமல் பல இடங்களில் பணி தேக்கமடைந்துள்ளது. இந்நிலங்களை உடனடியாக கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் ஒப்படைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.