sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்காச்சோள பயிருக்கு மானியத்தில் உரம்

/

மக்காச்சோள பயிருக்கு மானியத்தில் உரம்

மக்காச்சோள பயிருக்கு மானியத்தில் உரம்

மக்காச்சோள பயிருக்கு மானியத்தில் உரம்


ADDED : ஜூலை 06, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் எக்டர் பரப்பில் மக்காச்சோளம், சோளம், கம்பு ஆகியன பயிரிடப்படுகிறது. இப்-பயிர்களில் அதிக விளைச்சல் பெறுவதற்கு வேளாண் துறை முனைப்புடன் இயங்கி வருகிறது.

பயிர் விளைச்சலுக்கு முக்கிய காரணியாக இருப்பது மண் வளம். இதைப் பெருக்குவதற்கு உயிர் உரம் அவசியம் என்கிறார், தேசிய ஊட்டச்சத்து திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன்.

அவர் மேலும் கூறியதாவது:

சாகுபடி செய்யும் விளைநிலங்களில், மண்வளம் பெருக, மண்ணில் உள்ள அசோஸ்பைரில்லம், பாஸ்கோ பாக்டீரியா உயி-ரிகள் முக்கிய காரணிகளாக உள்ளன.

இதில் அசோஸ்பைரில்லம் காற்றில் உள்ள தழைச்சத்துகளை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துகிறது.அதேபோல் பாஸ்கோ பாக்டீரியா கரையாத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தை, கரையும் நிலைக்கு மாற்றி, பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகி-றது.

இந்த உயிரிகள் வேளாண் நிலங்களில் குப்பை உரம் சேர்க்கப்ப-டாதது; ரசாயன உரம், பூச்சிக் கொல்லி, களைக் ெகால்லி மருந்-துகள் தொடர்ந்து பயன்படுத்துவதன் காரணமாக மறைந்து வருகி-றது.இதற்காக வேளாண் துறை செயற்கையாக இந்த உயிரிகளை உற்பத்தி செய்து, 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இதனால் மண் வளம் கூடி மகசூல் அதிகரிக்கும்.தானிய பயிர்க-ளுக்கு எக்டருக்கு 500 மி.லி., அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்-பேக்டீரியா ஆகியவற்றை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் அல்லது 10 மூட்டை குப்பை உரத்துடன் கலந்து நீர்ப்பாசனத்துடன் வழங்-கலாம்.

தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் 50 சதவீத மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையத்தில் விவ-சாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெவித்தார்.






      Dinamalar
      Follow us