ADDED : செப் 10, 2011 01:53 AM
உடுமலை : உடுமலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கிளை சார்பில், ஆசிரியர் தின விழா ஐ.எம்.ஏ., ஹாலில் நடந்தது.
ஒன்றிய தலைவர் மஞ்சுளாதேவி தலைமை வகித்தார். மூத்தோர் அணி நாராயணசாமி, வேலுச்சாமி, அம்பிகாவதி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தங்கவேல் வரவேற்றார். ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி பேசினார். மாவட்ட தலைவர் முருகேசன், தளிஞ்சி தலைமையாசிரியர் மனோகரன், இன்னர் வீல் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஐ.எம்.ஏ., சார்பில் ரத்ததானம் வழங்கிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உடுமலை வித்யாசாகர் கலை, அறிவியல் கல்லூரியில், நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில், ஆசிரியர் தின விழா நடந்தது. கல்லூரிச் செயலர் சத்யாநாதன் முன்னிலை வகித்தார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் அனிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சிந்தாமணி பேசினார். திட்ட அலுவலர் பேராசிரியர் செல்லத்துரை நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சண்முகசுந்தரம் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.