ADDED : மார் 30, 2026 05:34 AM
காங்கேயம்:காங்கேயம்
அருகே பகவதிபாளையத்தில், காங்கேயம்-வெள்ளகோயில் பி.ஏ.பி.,
நீர்ப்பாசன சங்க தலைவர் வேலுசாமி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்கம்
தலைவர் ரவி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பி.ஏ.பி., பாசன
நீர் பாதுகாப்பு சங்கம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம்,
பெருந்துறை சிப்காட் எதிர்ப்பு இயக்கம், நொய்யல் பாதுகாப்பு குழு மற்றும்
மற்ற விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன. வரும் ஏப்., 10ம் தேதி,
காங்கேயத்தில் மாபெரும் விலசாய சங்க கூட்டம் நடத்தப்போவதாக
முடிவெடுத்தனர்.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது: தமிழக
தேர்தல் ஏப்.,23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காங்கேயம் தோகுதியில்
போட்டியிடும் தி.மு.க., - அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக
வெற்றி கழக வேட்பாளர்களை அழைத்து, 10ம் தேதி காங்கேயத்தில் நடக்கும்,
4,000 விவசாயிகள் முன்னிலையில், விவசாயிகளின் பல்வேறு
முக்கியமான கோரிக்கைகள் தொடர்பாக தேர்தல் உறுதிமொழி பெறுவதாக
இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.
