தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலக்கிய படைப்புகள் வெளியிட உதவித்தொகை

இலக்கிய படைப்புகள் வெளியிட உதவித்தொகை

இலக்கிய படைப்புகள் வெளியிட உதவித்தொகை


ADDED : ஜூலை 03, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களின் இலக்கிய படைப்புகளில், 11 நபர்களின் படைப்பை வெளியிட உதவித்தொகை வழங்கப்படும்.

ஒரு படைப்புக்கு ஒரு லட்சம் ரூபாய். எழுத்தாளருக்கு வயது வரம்பு இல்லை. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, புதினம் என எதுவாகவும் இருக்கலாம். தமிழ் மொழி, பிற மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த மொழி படைப்பாகவும் இருக்கலாம். படைப்புகள், 90 பக்கத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும், ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திலும் வேலை நாளில் விண்ணப்பத்தை பெறலாம். மேலும், tn.gov.in என்ற இணைய தளத்திலும், https://cms.tn.gov.in./cms_migrated/document/ forms/best_writers_award_application_form_2025_2026.pdf என்ற லிங்கிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us