/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுபானம் விலை உயர்வு :"குடி'மகன்கள் அவதி
/
மதுபானம் விலை உயர்வு :"குடி'மகன்கள் அவதி
ADDED : ஜூலை 11, 2011 09:37 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில்
நேற்று திடீரென மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டன.
'டாஸ்மாக்' மூலம்
திருப்பூர் மாவட்டத்தில் 247 மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன. இவற்றில்
தினமும் சராசரியாக 18 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள்
விற்பனையாகின்றன. கடந்த சில நாட்களாகவே மதுபாட்டில்களின் விலை
உயர்த்தப்படும் என்ற பேச்சு எழுந்து வந்தது. நேற்று திடீரென அனைத்து
சரக்குகளின் விலை உயர்த்தப்பட்டன. குவார்ட்டர் 5 ரூபாய், 'ஆப்' பாட்டில் 10
ரூபாய், முழு பாட்டில் 15 முதல் 20 ரூபாய், பீர் ரகம் வாரியாக 5 முதல் 10
ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது.நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு மேல்,
திருப்பூர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் இவ்விலை உயர்வு குறித்து
வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில கடைகளில் மட்டும் மாலை 6.00
மணிக்கு மேல் விலை உயர்வு குறித்த விவரம் ஒட்டப்பட்டிருந்தது. அட்டை யில்,
'மது பாட்டில் விலை உயர்வு' என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதி தொங்க
விடப்பட்டிருந்தது. திடீரென விலை உயர்த்தப்பட்டதால், ஆவேசம் அடைந்த
வாடிக்கை யாளர்கள் கடையில் இருந்த விற்பøனை யாளர்களிடம் வாக்குவாதம்
செய்தனர்.கடை விற்பனையாளர்கள் கூறுகையில், '11ம் தேதி (நேற்று) காலை முதல்
விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்று மாலை 4.00 மணிக்கு பின்பே, எங்களுக்கு
தகவல் அளிக்கப்பட்டது; பல கடைகளுக்கு சொல்லவில்லை. ஒரு நாளின் 40 சதவீத
விற்பனை மாலை 4.00 மணிக்குள் நடக்கிறது. விற்பனையாளர், தங்களது கையில்
இருந்து பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.திருப்பூர்
டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'விலை உயர்வு குறித்து காலையிலேயே
அனைத்து கடைகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டு விட்டது,' என்றனர்.