/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அப்பாடா... ஒரு வழியா நிம்மதி; பல்லடம் அரசு மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சை வசதி அமைகிறது
/
அப்பாடா... ஒரு வழியா நிம்மதி; பல்லடம் அரசு மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சை வசதி அமைகிறது
அப்பாடா... ஒரு வழியா நிம்மதி; பல்லடம் அரசு மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சை வசதி அமைகிறது
அப்பாடா... ஒரு வழியா நிம்மதி; பல்லடம் அரசு மருத்துவமனையில் கூடுதல் சிகிச்சை வசதி அமைகிறது
ADDED : மார் 27, 2024 12:06 AM

பல்லடம்;பல்லடம் அரசு மருத்துவமனையில், 4 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் கிடைக்க உள்ளன.
பல்லடம் வட்டாரத்தில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பலரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடைகின்றனர். நோய் தொற்று, கர்ப்பகால சிகிச்சை, குழந்தைகளுக்கான சிகிச்சைகள், அவசர சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு தேவையான கூடுதல் சிகிச்சை வசதிகள் இங்கு இல்லாததால், பெரும்பாலும் திருப்பூர் அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. பல்லடம் அரசு மருத்துவமனையில், எதற்கெடுத்தாலும் நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவோருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் போவதே முக்கிய காரணமாக உள்ளது. கூடுதல் சிகிச்சை வசதிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள், பொதுமக்கள் பல காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனை நிறைவேற்றும் விதமாக, சமீபத்தில், தமிழக அரசு, 4 கோடி ரூபாய் நிதியை பல்லடம் அரசு மருத்துவமனைக்காக ஒதுக்கியுள்ளது. இதன் வாயிலாக, விபத்து மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை அமையும் பட்சத்தில், எண்ணற்ற நோயாளிகள், வறுமையில் வாடும் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். எனவே, நிதி ஒதுக்கியதோடு இல்லாமல், சிறப்பு மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

