ADDED : ஜூலை 13, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், பென்னாகரம் அடுத்த போடூரில், 300 ஆண்டு பழமையான நடுகல் வீரகாலு சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாத திருவோணம் நட்சத்திரம் மற்றும் சனிக்கிழமையையொட்டி குலதெய்வம் மற்றும் வைணவ வழிபாடு நேற்று நடந்தது. இதில் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனை நடந்தது.
பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்தில் வீரகாலு சுவாமி காட்சி அளித்தார். திருவோணம் நட்சத்திரம் மற்றும் சனிக்கிழமையில் இணைந்து வரும் நாளில் வைணவ குலதெய்வம் மற்றும் பெருமாள் வழிபாடு செய்தால் சகல விதமான தடைகளும் நீங்கும் என பக்தர்கள் தெரிவித்தனர்.