/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவியுது பூக்கள்; குறையுது விலை
/
குவியுது பூக்கள்; குறையுது விலை
ADDED : மே 10, 2024 02:06 AM

திருப்பூர்;வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால், பூக்கள் வரத்து மார்க்கெட்டுக்கு அதிகமாகியுள்ளது; விலை குறைந்துள்ளது.
திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ, 1.30 டன் வந்து குவிகிறது. வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு கிலோ, மல்லிகை, 250 முதல், 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 250 கிராம், 70 ரூபாய். மல்லிகை பூ விலையை விட செவ்வந்தி பூ விலை உயர்ந்துள்ளது. கிலோ, 320 ரூபாய்க்கு செவ்வந்தி விற்கிறது. முல்லை கிலோ, 200 ரூபாய், காக்கடா, 180, அரளி, 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பூ வியாபாரிகள் கூறுகையில்,' அனைத்து பூ கடைகளிலும் மல்லிகை பூ தான் நிறைந்துள்ளது. வெயிலுக்கு விரைந்து மொட்டு மலர்ந்து விடுகிறது. மூட்டை மூட்டையாக வந்து குவிவதால், விற்றுத்தீர்க்க, விலையை குறைந்துள்ளோம். மொத்த விலையில், கிலோ, 220 ரூபாய்க்கு மல்லிகை பூ தருகிறோம். வைகாசி பிறப்பு, முகூர்த்தம் வந்தாலும், பூ வரத்து குறையாமல், தொடர்ந்து அதிகரித்தால், இதே நிலை தான் தொடரும்,' என்றனர்.