ADDED : மார் 04, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காங்கயம், குப்பநாயக்கன்வலசு, செங்கச்சோழக்காட்டை சேர்ந்தவர் பாப்பாத்தி, 68; விவசாயி.
தனது தோட்டத்தில், 39 செம்மறி ஆடு, 2 வெள்ளாடு வளர்த்து வந்தார். நேற்று காலை தோட்டத்தில் ஆடுகளை மேய்ப்பதற்காக விட்டு விட்டு சென்றார். மதியம் சென்ற போது, நாய் கடித்து ஒரு செம்மறி ஆடு இறந்துள்ளது. ஆறு ஆடுகள் காயமடைந்தன. இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.