/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜூன் 3ல் கோள்களின் அணிவகுப்பு நிகழ்வு
/
ஜூன் 3ல் கோள்களின் அணிவகுப்பு நிகழ்வு
ADDED : மே 30, 2024 11:54 PM
உடுமலை:ஆறு கோள்கள் நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய வானியல் நிகழ்வை பார்வையிட உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து, உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் கூறியதாவது:
சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும், குறிப்பிட்ட சாய்வு கோணத்தில் நேரம் மற்றும் கால இடைவெளியில் சூரியனை சுற்றுகின்றன. 5 அல்லது 6 கோள்கள் அரிதாக சில நாட்களில், நேர்கோட்டில் வருவது போல் வானில் காட்சியளிக்கும். அத்தகைய நிகழ்வு ஜூன் 3ம் தேதி நடக்க உள்ளது.
அதிகாலையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக இது காணப்படும்.
உடுமலையில் இந்த அரிய நிகழ்வை தொலைநோக்கி வழியாக கண்டு ரசிப்பதற்கு, காந்திநகர் பகுதியில் அறிவியல் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள், கலிலியோ அறிவியல் கழகத்தை 8778201926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
இவ்வாறு கூறினர்.