/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகுன விநாயகரிடம் உத்தரவு; குண்டம் திருவிழா துவக்கம்
/
சகுன விநாயகரிடம் உத்தரவு; குண்டம் திருவிழா துவக்கம்
சகுன விநாயகரிடம் உத்தரவு; குண்டம் திருவிழா துவக்கம்
சகுன விநாயகரிடம் உத்தரவு; குண்டம் திருவிழா துவக்கம்
ADDED : மார் 12, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, ஏப்., 2ம் தேதி கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 8ம் தேதி குண்டம் இறங்குதல், நிகழ்ச்சி நடக்கிறது. குண்டம் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள சகுன விநாயகரிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
முன்னதாக கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.