/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி துவக்கம்
/
ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி துவக்கம்
ADDED : மார் 12, 2025 12:35 AM
திருப்பூர்; தாராபுரம் ஒன்றிய பகுதிகளில் முடிவடைந்த திட்ட பணிகள் திறப்பு விழா மற்றும் புதிய திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது.
மொத்தம், 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த கட்டுமானங்கள்; 4.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகள் என, மொத்தம், 5.54 ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கவுண்டச்சிபுதுார் ஊராட்சி, கொண்டரசம்பாளையத்தில், 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நலக்கூடம், 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டி, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், தொப்பம்பட்டி ஊராட்சி மடத்துக்குளத்தில், 39.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன.
அதேபோல், கொண்டரசம்பாளையத்தில், பல்வேறு பகுதிகளில் மொத்தம், 4.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், பயனாளிகள் 10 பேருக்கு மருந்து பெட்டகங்கள், கர்ப்பிணிகள் ஐந்து பேருக்கு, ஊட்டச்சத்து நல பெட்டகங்கள் வழங்கப்பட்டன. தாராபுரம் ஆர்டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திரவியம் உள்பட அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.