/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்நிலையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குவியல்!: என்ன செய்யப் போகிறது மாநகராட்சி?
/
நீர்நிலையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குவியல்!: என்ன செய்யப் போகிறது மாநகராட்சி?
நீர்நிலையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குவியல்!: என்ன செய்யப் போகிறது மாநகராட்சி?
நீர்நிலையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குவியல்!: என்ன செய்யப் போகிறது மாநகராட்சி?
ADDED : மே 16, 2024 10:43 AM

திருப்பூர் : கோடையின் வெப்பம் தணிக்க மக்களால் பயன்படுத்தி, துாக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் குளிர்பான மற்றும் தண்ணீர் பாட்டில்கள், நொய்யல் நதியில் டன் கணக்கில் குவிந்துக் கிடக்கின்றன.
'நீர்நிலைகள் மற்றும் நிலத்தில் வீசப்படும் பாலிதீன் கவர், பிளாஸ்டிக் பாட்டில்களால் மண் மலடாவததோடு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படும்' என்பது, அரசின் எச்சரிக்கை.
எனவே, 'பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் உட்பட பொருட்களை பயன்படுத்துவோர், அவற்றை கால்வாய், நீர்நிலைகளில் துாக்கி எறியாமல், அந்தந்த உள்ளாட்சி துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்; அத்தகைய பிளாஸ்டிக்கு களை உள்ளாட்சி நிர்வாகங்கள் மறுசுழற்சிக்கு அனுப்பி, பிளாஸ்டிக் இல்லா பகுதியாக, தங்கள் இடத்தை மாற்ற வேண்டும்' என்பதும், அரசின் வழிகாட்டுதல்.
பேச்சளவிலும் கிடையாது!
ஆனால், 'பயன்படுத்திய பிளாஸ்டிக் வகையறாக்களை பொது வெளியில் துாக்கி எறியக்கூடாது' என்ற விழிப்புணர்வு மக்களிடமும் இல்லை; அவை வெளியே வராமல் கவனிக்க வேண்டிய பொறுப்பு, உள்ளாட்சி நிர்வாகங்களிடமும் இல்லை. அதற்கு உதாரணம், திருப்பூர் நொய்யல் நதியில், டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பாலிதீன் பாட்டில்களும், கழிவுகளும் தான்.
கோடையின் தாகம் தணிக்க, பொதுமக்கள் பயன்படுத்திய குளிர்பான மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தான் அவை.திருப்பூர் பி.என்.ரோடு, லட்சுமி நகர், பிரிட்ஜ் வே காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர், நொய்யல் ஆற்றில் கலக்கிறது; இந்த நீர் வழித்தடம் தான், பிளாஸ்டிக் வகையறாக்களால் சூழப்பட்டிருக்கிறது.
எதற்காகநொய்யல் விழா?
ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையின் போது, திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியவை இணைந்து, நொய்யல் நதிக்கரையில், பாரம்பரிய கலை விழா நடத்துவது வழக்கம். 'நொய்யல் நதி பாதுக்கப்பட வேண்டும்; மழையின் போது அதில் நீர் பெருக்கெடுக்க வேண்டும்' என்ற நோக்கில் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும், நீர்வழித்தடத்தை பாலிதின் அரக்கனிடமிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை எடுத்தால் மட்டும் தான், இதுபோன்ற விழாக்கள் பலன் தரும்.
இது, மாநகராட்சி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; ஒட்டு மொத்த மாவட்டம் சார்ந்த பிரச்னை. பிளாஸ்டிக் அரக்கனை ஒழித்து, மண், நீர் வளம் காக்க, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம், பிற உள்ளாட்சி அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகளில் தங்களையும் இணைத்து, நகரின் நலன் காப்பதாக கூறிக் கொள்ளும் பொது நல அமைப்புகள் இப்பிரச்னையை எப்படி கையாளப் போகின்றன?' என்பதே, பொதுவான கேள்வி.