நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பு, துளசி பார்மசி, லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது; மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை வகித்தார்.முகாமில், 101 பேருக்கு இலவச மருத்துவ ஆலோசனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்த வகை, எடை, உயரம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஆறு பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.செயலாளர் அங்கமுத்து, வட்ட தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

