ADDED : பிப் 03, 2024 03:49 AM
திருப்பூர்: வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தால், புதிய தொழில் முனைவோர்கள் உருவாவது அதிகரிக்கும் என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக, ஒரு லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தால், புதிய தொழில்முனைவோர் உருவாக ஊக்கம் கிடைக்கும். சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த, கூடுதல் ரயில்வே சரக்கு முனையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் பயன் இருக்கும்.
மகளிர் குழுக்கள் திட்டத்தாலும், புதிய தொழில்முனைவோர் உருவாகுவது அதிகரிக்கும். இருப்பினும், ஜவுளித்தொழிலுக்கு புதிய
அறிவிப்பு இல்லை; தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், திருப்பூரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

