/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 சவரன் நகை, பணம் திருட்டு சாவி 'ரகசியம்' எப்படி தெரிந்தது?
/
10 சவரன் நகை, பணம் திருட்டு சாவி 'ரகசியம்' எப்படி தெரிந்தது?
10 சவரன் நகை, பணம் திருட்டு சாவி 'ரகசியம்' எப்படி தெரிந்தது?
10 சவரன் நகை, பணம் திருட்டு சாவி 'ரகசியம்' எப்படி தெரிந்தது?
ADDED : ஏப் 22, 2024 11:32 PM
பல்லடம்;பல்லடம் அருகே கரைப்புதுார் ஊராட்சி, மீனாம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 59; பனியன் கம்பெனி ஒன்றில், கான்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை, அருகில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டு வீடு திரும்பினர். வீட்டின் கேட், கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கருப்பசாமி, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அதில், பீரோவில் வைத்திருந்த, 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது.
திருட்டு நடந்த வீட்டுக்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார், நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
கருப்பசாமி குடும்பத்தினர், நகை பணம் வைத்திருந்த பீரோவின் சாவியை பூட்டிவிட்டு, படுக்கை மெத்தைக்கு கீழ் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் சாவியை வைத்து விட்டு சென்றுள்ளனர்.
திருடர்கள், படுக்கைக்கு கீழ் இருந்த சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்து நகை, பணத்தை திருடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினருக்கு மட்டுமே தெரிந்த சாவியின் ரகசியம் திருடர்களுக்கும் தெரிந்தது எப்படி என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

