/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
/
விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 09, 2024 04:48 AM
திருப்பூர், : ஈரோடு மாவட்டம், பெருந்துறை - கோவை மெயின் ரோடு, விஜயமங்கலம் அருகே உள்ள பாரதி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் படித்த பவினேஷ், கலைப்பிரியா ஆகியோர், தலா, 588 மதிப்பெண் பெற்று முதலிடம், கிரிபிரசாத், 587 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், நவீனா, 586 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம்.
பள்ளியின் தாளாளர் மோகனாம்பாள், பள்ளி முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், எங்கள் பள்ளி பொதுத்தேர்வில், தொடர்ச்சியாக, 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வில், 20 பேர் 580 மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும், 114 பேர், 550 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 226 பேர், 500க்கு அதிகாகவும் மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.
கணக்கு பாடத்தில், 12 மாணவ, மாணவியர்; இயற்பியலில், ஐந்து பேர்; வேதியியலில், ஐந்து பேர்; தாவரவியலில், ஆறு பேர்; கம்ப்யூட்டர் அறிவியலில் 58 பேர், வணிகவியலில் 13 பேர், பொருளியலில், எட்டு பேர்; கணக்குபதிவியலில், ஏழு பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியின், பாரதி அகடமியில், 2025ம் ஆண்டுக்கான 'நீட்' தேர்வுக்கான பயிற்சி, 20ம் தேதி முதல் துவங்குகிறது. பள்ளியில் படித்த, 500க்கும் அதிகமானவர்கள் மருத்துவர்களாகி உள்ளனர். தற்போது, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.