/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை பெய்ய வேண்டி கோவிலில் 108 குடம் தண்ணீர் அபிேஷகம்
/
மழை பெய்ய வேண்டி கோவிலில் 108 குடம் தண்ணீர் அபிேஷகம்
மழை பெய்ய வேண்டி கோவிலில் 108 குடம் தண்ணீர் அபிேஷகம்
மழை பெய்ய வேண்டி கோவிலில் 108 குடம் தண்ணீர் அபிேஷகம்
ADDED : மே 02, 2024 11:33 PM
உடுமலை:உடுமலையில், மழை வேண்டி கோவிலில் 108 குடம் தண்ணீர் அபிேஷகம் நாளை நடக்கிறது.
மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெயில் அடிக்கிறது.
வெயிலை தாங்க முடியாமல், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மழை வேண்டி ஆங்காங்கே கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடந்து வருகிறது.
உடுமலை ஜி.டி.வி., லே அவுட்டில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மழை பெய்ய வேண்டி, நாளை (4ம் தேதி) காலை, 7:00 மணிக்கு செல்வவிநாயகருக்கு 108 குடம் தண்ணீர் அபிேஷகம் நடக்கிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.