/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10வது புத்தக திருவிழா வரவேற்பு குழு கூட்டம்
/
10வது புத்தக திருவிழா வரவேற்பு குழு கூட்டம்
ADDED : ஆக 06, 2024 06:12 AM
உடுமலை: உடுமலை புத்தகத் திருவிழா வரவேற்பு குழு கூட்டம், நடந்தது.
புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அவ்வப்போது புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. அதன் அடிப்படையில், புத்தக திருவிழா நடக்கவுள்ளது.
உடுமலையில், பத்தாவது புத்தக திருவிழா வரவேற்பு குழு கூட்டம் தேஜஸ் அரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, பள்ளி தலைமையாசிரியர் ெஹன்றி டேனியல் தலைமை வகித்தார்.
புத்தக திருவிழாவின் நோக்கம் குறித்து தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்கள், வக்கீல்கள் விளக்கமளித்து பேசினர்.
வரவேற்பு குழு தலைவராக தனியார் நிறுவன இயக்குனர் நாகராஜ், செயலாளராக சக்திவேல், பொருளாளராக பாலகிருஷ்ணன், உதவி தலைவர்கள், உதவி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் வரவேற்பு குழுவாக சேர்க்கப்பட்டனர்.