/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவு
/
இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவு
ADDED : மே 10, 2024 12:45 AM
திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடந்தது. மாவட்டம் முழுதும், 108 மையங்களில், 30 ஆயிரத்து, 620 மாணவர்கள் தேர்வெழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல், 25ல் நிறைவடைந்து, தேர்வுத்துறை வழிகாட்டுதலின் படி, மதிப்பெண்களை பதிவேற்றும் பணி ஏப்ரல் இறுதி வாரத்தில் முடிந்தது.
இன்று காலை, 9:30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஆனந்தி உள்ளிட்டோர் தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர்.
கடந்த, 2022ல் மாநிலத்தில், 29வது இடம் பெற்ற திருப்பூர், 2023ல், 11வது இடம் பெற்றது. இம்முறை முதல் பத்து இடங்களுக்கு வருமா என்பது இன்று காலையில் தெரிந்து விடும். தேர்வு முடிவு வெளியான அடுத்த வினாடியே, மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., சென்று சேர்ந்து விடும். பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், தேர்வு முடிவுகள் ஒட்டப்படும்.