/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப் - 2 தேர்வு 11,014 பேர் எழுதினர்
/
குரூப் - 2 தேர்வு 11,014 பேர் எழுதினர்
ADDED : செப் 15, 2024 01:31 AM
திருப்பூர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் -2 மற்றும்2 - ஏ' தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் தாராபுரம் தாலுகாக்களில், 53 மையங்களில் தேர்வுகள் நடந்தன.
மாவட்ட அளவில், 15 ஆயிரத்து, 433 பேர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். தேர்வுக்காக, 15 மொபைல் யூனிட், ஐந்து பறக்கும் படைகள், 53 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று பார்வையிட்டார். தேர்வு, காலை, 9:30 மணிக்கு துவங்கிய தேர்வு, மதியம், 12:30 மணிக்கு நிறைவடைந்தது.
தாராபுரம் தாலுகா - 2,808 பேர், திருப்பூர் வடக்கு - 3,943, திருப்பூர் தெற்கு - 4,263 பேர் என, 11 ஆயிரத்து, 14 பேர் (71 சதவீதம்) நேற்று தேர்வு எழுதினர். தாராபுரத்தில், 776 பேர், திருப்பூர் வடக்கில்,1,686 பேர் திருப்பூர் தெற்கில், 1,956 பேர் என, 4,419 பேர் தேர்வு எழுதவரவில்லை.