/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தும்! வரும் வாரத்தில் அனல் 'பறக்கும்'
/
திருப்பூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தும்! வரும் வாரத்தில் அனல் 'பறக்கும்'
திருப்பூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தும்! வரும் வாரத்தில் அனல் 'பறக்கும்'
திருப்பூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தும்! வரும் வாரத்தில் அனல் 'பறக்கும்'
ADDED : மே 04, 2024 11:22 PM
திருப்பூர்;'திருப்பூர் மாவட்டத்தில் வரும் வாரம், 111 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டும்' என, வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
கோடை வெயிலின் துவக்கமே மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், தகிக்கும் வெப்பத்தை தணிக்க கோடை மழையை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். மாநிலத்தின் பல மாவட்டங்களில், வரலாறு காணாத வெயில் நிலவுகிறது.
குறிப்பாக, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மேற்கு மண்டலங்களில், இதுவரையில்லாத அளவில் வெயில் உச்சத்தை தொட்டிருக்கிறது. 'பக்கத்து மாவட்டமான திருப்பூரிலும், இம்முறை வெயில் அதிகம்' என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
வானிலை அறிக்கை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில், வரும், 8ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 41 முதல், 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். (அதாவது, 105.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 111 டிகிரி பாரன்ஹீட்) என, கூறப்பட்டுள்ளது. இது, கடந்த வார வெப்பநிலையை விட, 2 சதவீதம் அதிகம்.திருப்பூரில், குறைந்தபட்ச வெப்பநிலை, 23 முதல், 26 டிகிரி செல்சியஸாக இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 சதவீதமாக பதிவாக வாய்ப்புள்ளது. 'மணிக்கு, 14 முதல், 22 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.