sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீர்வை எதிர்நோக்கி 12 பிரச்னைகள்

/

தீர்வை எதிர்நோக்கி 12 பிரச்னைகள்

தீர்வை எதிர்நோக்கி 12 பிரச்னைகள்

தீர்வை எதிர்நோக்கி 12 பிரச்னைகள்


ADDED : மே 05, 2024 11:43 PM

Google News

ADDED : மே 05, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளிச்சம் இல்லை

திருப்பூர், பெரிச்சிபாளையம் வினோபா நகர் முதல் வீதியில் தெருவிளக்கு ஒருபுறம் முழுமையாக திரும்பிய நிலையில் உள்ளது. மறுபுறம் சுத்தமாக வெளிச்சமில்லை.

- ஈஸ்வரமூர்த்தி, வினோபா நகர்.

வீணாகும் தண்ணீர்

வெள்ளியங்காடு, கே.எம்.ஜி., நகரில் குழாய் உடைந்துள்ளது. தண்ணீர் வினியோகிக்கும் போதெல்லாம் வீணாகி, சாலையில் ஓடுகிறது.

- இளையராஜா, கே.எம்.ஜி., நகர்.

முடங்கிய பணி

திருப்பூர், 46வது வார்டு, வி.ஜி.வி., கார்டன் காஞ்சி நகர் - காசிபாளையம் சாலை பணி ஜல்லி கொட்டி இரண்டு மாதமாக அப்படியே உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். சாலை அமைக்க வேண்டும்.

- விஜயகுமார், காஞ்சி நகர்.

துர்நாற்றம் வீசுது

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில், மழைநீர் வடிகால் சிலாப் கல் உடைந்துள்ளது. வடிகாலில் தெருவோர ஓட்டல்கள் மற்றும் கடைகள் உணவு கழிவுகளை கொட்டி விடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் நிற்க முடியவில்லை.

- ரஞ்சித்குமார், புதிய பஸ் ஸ்டாண்ட்.

விபத்து அபாயம்

திருப்பூர், கணியாம்பூண்டி பிரிவு வளைவில், திரும்பும் வாகனங்கள் தெரியாத வகையில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். விபத்து அபாயம் உள்ளது. இங்கு பிளக்ஸ் போர்டு வைக்க தடைவிதிக்க வேண்டும்.

- ரஹீம் அங்குராஜ், கணியாம்பூண்டி.

கழிவுநீர் தேக்கம்

திருப்பூர் மும்மூர்த்தி நகர் கிழக்கு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- சிவராஜ், மும்மூர்த்தி நகர்.

மின்சாரம் வீண்

திருப்பூர், பல்லடம் ரோடு, வெட்டுப்பட்டான் குட்டை ஸ்டாப், சிக்னல் சந்திப்பில் பகலிலும் உயர்கோபுர மின்விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது.

- ஜெயவர்த்தன், வெட்டுப்பட்டான் குட்டை.

குழாய் உடைப்பு

திருப்பூர் வடக்கு, பூண்டி ரிங் ரோடு, லட்சுமி டவர் ஸ்டாப் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- மனோகரன், திருமுருகன்பூண்டி.

சீராகுமா சாலை?

திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் இருந்து சின்ன பொம்மநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில் சரிவர தார் ஊற்றாமல், பெயர்ந்து காணப்படுகிறது. சாலையை சீரமைக்க வேண்டும்.

- அழகேசன், சின்னபொம்மநாயக்கன்பாளையம்.

கழிப்பிடம் சரியில்லை

மத்திய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட திருப்பூர் பஸ் ஸ்டாண்டுகளில் கழிப்பிடம் பராமரிப்பு சரியில்லை.

- சின்னா, காமராஜ் ரோடு.

மரக்'கொலை'கள்

திருப்பூரில் தொடர்ந்து 'மரக்கொலை'கள் அரங்கேறுகின்றன. நடவடிக்கைகள் எடுக்கப்படுவதே இல்லை. பசுமை காக்க அதிகாரிகள் காட்டும் அக்கறை இவ்வளவுதானா?

- வேணி, தென்னம்பாளையம்.

விலை தாறுமாறு

திருப்பூரில் உள்ள திரையரங்கு கேன்டீன்களில் தின்பண்டங்களின் விலை தாறுமாறாக உள்ளது; நடவடிக்கை தேவை.

- ரஞ்சன், எஸ்.ஆர்., நகர்.






      Dinamalar
      Follow us