/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களத்தில் 13 பேர்; ஜெயிக்கப்போவது யாரு? இறுதிக்களத்தில் 13 வேட்பாளர்கள்
/
களத்தில் 13 பேர்; ஜெயிக்கப்போவது யாரு? இறுதிக்களத்தில் 13 வேட்பாளர்கள்
களத்தில் 13 பேர்; ஜெயிக்கப்போவது யாரு? இறுதிக்களத்தில் 13 வேட்பாளர்கள்
களத்தில் 13 பேர்; ஜெயிக்கப்போவது யாரு? இறுதிக்களத்தில் 13 வேட்பாளர்கள்
ADDED : மார் 31, 2024 11:43 PM
திருப்பூர்;லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே திருப்பூரில் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்பட்டது.
இரு கூட்டணிகள் இடையேயும் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலவிய நிலையில், திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் கட்சி எது என்பதிலேயே பெரும் மர்மம் நிலவியது.
இறுதியாக தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ.,வுக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் குறித்து முடிவு வெளியாவதில் பெரும் இழுபறி நீடித்தது. இறுதியில், சிட்டிங் எம்.பி., சுப்பராயன் பெயர் அறிவிக்கப்பட்டது.
அதே போல், அ.தி.மு.க.,கூட்டணியில் வேட்பாளர் யார் என்பதில் ஒரு மியூசிக் சேர் போட்டியே நடந்தது, இறுதியில், அருணாசலம் பெயர் கட்சி தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டு, இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.
பா.ஜ.,வைப் பொறுத்தவரை, வேட்பாளர் யார் என்பதில் முதல் கட்டத்தில் பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையிலும், முருகானந்தம் பெயர் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்த வரை, தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே, சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பே பிரசாரத்தை துவங்கி விட்டார்.
கடந்த தேர்தலில் இவர் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.திருப்பூர் தொகுதியில் போட்டியிட்ட 38 பேர் மொத்தம் 46 மனுக்கள் தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனையின் போது, தள்ளுபடி செய்த மனுக்கள் போக 16 பேர் களத்தில் இருந்தனர்.
மேலும் இதில் 3 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது, 13 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.
பிரசாரம் சூடுபிடிக்கும்
ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

