/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
14 ஆண்டுகள் தவமாய்த் தவமிருந்து மாசில் இருந்து கிடைத்த ' விடுதலை '
/
14 ஆண்டுகள் தவமாய்த் தவமிருந்து மாசில் இருந்து கிடைத்த ' விடுதலை '
14 ஆண்டுகள் தவமாய்த் தவமிருந்து மாசில் இருந்து கிடைத்த ' விடுதலை '
14 ஆண்டுகள் தவமாய்த் தவமிருந்து மாசில் இருந்து கிடைத்த ' விடுதலை '
ADDED : ஆக 14, 2024 11:14 PM

திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் உயர துவங்கியிருந்தது. ஆனால், வண்ண வண்ணச் சாயக்கழிவுகளால், தொழிலுக்கே கெட்ட பெயர் ஏற்பட்டது. ஓடைகள் வழியாக நொய்யலை சேர்ந்து, ஒட்டுமொத்த நதியை சீரழித்த சாயக்கழிவு, நிறைவாக ஒரத்துப் பாளையம் அணையில் தேங்கி, நிலத்தடி நீரையும் நஞ்சாக மாற்றியது.
ஒரத்துப்பாளையம் சுற்றுப்பகுதி பாதித்ததால், அங்கு விவசாயமும் கேள்விக்குறியாக மாறியது. இயற்கைக்கு பாதிப்பு ஏற்பட்ட போது, கோர்ட் தலையீட்டால், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் கட்டாயமானது.
கடும் பொருட் செலவில், சாயக்கழிவு சுத்திகரிப்பு செய்யப் படுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடும், திருப்பூரின் மீதான அவப்பெயரும் மறைந்திருக்கிறது. இதற்காக, 14 ஆண்டு களாகியிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நொய்யல் தண்ணீரில் நடத்திய ஆய்வில், விவசாயத்துக்கு ஏற்றதாக மாறியிருக்கிறது. ஒரத்துப்பாளையம் அணை கடந்து செல்லும் நொய்யல் நீர், சின்னமுத்துார் தடுப்பணையில் தேக்கப்படுகிறது.
அங்கிருந்து வாய்க்கால் மூலம் எடுத்துச்சென்று, ஆத்துப்பாளை யம் நீர்த்தேக்கத்தில் இருப்பு வைத்து, 25 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டது.
சாயக்கழிவால் ஏற்பட்ட பாதிப்பு, 20 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கியுள்ளது; தண்ணீரும் குறைவான டி.டி.எஸ்.,(நீரில் கரையும் உப்பின் அளவு) அளவுடன் கிடைக்கிறது.
மழைநீர் வரும் போது சின்னமுத்துாரில் இருந்து ஆத்துப்பாளையத்துக்கு தண்ணீர் எடுக்கப்படும். மற்ற நாட்களில், கழிவுநீர் கலந்த தண்ணீர் காவிரி ஆற்றுக்கு சென்றுவிடுகிறது.