/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1.5 டன் பாலிதீன் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
/
1.5 டன் பாலிதீன் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
1.5 டன் பாலிதீன் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
1.5 டன் பாலிதீன் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
ADDED : மே 24, 2024 12:16 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள், டம்ளர், தட்டு உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதற்கான தடை விதிக்கப்பட்ட போது, மாநகராட்சி அதிகாரிகள் களம் இறங்கி, இவற்றின் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் மும்முரமாக பணியாற்றினர். அதனால், விற்பனை மற்றும் பயன்பாடு பெருமளவு குறைந்தது. அதன் பின் அவ்வப்போது சுகாதாரபிரிவினர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்தனர். அதன் பின் இதுகுறித்த கண்காணிப்பில் சற்று சுணக்கம் ஏற்பட்டது.
இதனை பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் மீண்டும் இதன் விற்பனையை வழக்கம் போல் தொடர்ந்தனர்.
இந்நிலையில், தற்போது மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் தற்போது மும்முரமாக களம் இறங்கி, பாலிதீன் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில் நேற்று மாநகர நல அலுவலர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமையில், 2வது மண்டலம் பாண்டியன் நகர் பகுதியில் ஆய்வு நடந்தது. அங்குள்ள ஒரு கடையில் தரை தளத்தில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 1.5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதார அலுவலர் பிச்சை, சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.