/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஈரோடு மாவட்ட அளவில் 172 பூத்கள் பதற்றமானவை
/
ஈரோடு மாவட்ட அளவில் 172 பூத்கள் பதற்றமானவை
ADDED : ஏப் 06, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில் கடந்த தேர்தல்களில் மோதல், பிரச்னை, தகராறு, சட்டம் - ஒழுங்கால் ஓட்டுப்பதிவு குறைவு போன்றவை நடந்த ஓட்டுச்சாவடிகளை பதற்றமானவைகளாக கணக்கெடுத்துள்ளனர்.
மாவட்ட அளவில், 2,222 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில், 172 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதில்லாமல், 1,111 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா, வீடியோ கேமரா மூலம் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.
இதில் பதற்றமான, 172 ஓட்டுச்சாவடிகளும் அடங்கும். இவற்றில் கூடுதல் நுண் பார்வையாளர், கூடுதல் போலீசார், தேவைப்பட்டால் துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

