ADDED : ஆக 13, 2024 12:32 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம், லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் மொத்தம் 367.80 மி.மீ., மழை பதிவாகி யுள்ளது.
அதிகபட்சமாக திருப்பூர் - அவிநாசி ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலக பகுதிகளில் 74 மி.மீ., அளவுக்கு கன மழை பெய்துள்ளது. ஊத்துக்குளி தாலுகா அலுவலக பகுதியில் 5 மி.மீ., - திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் 43; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 35; அவிநாசி தாலுகா அலுவலக பகுதியில் 33; திருப்பூர் - பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக பகுதியில் 23; பல்லடம் தாலுகா அலுவலக பகுதியில் 20; தாராபுரம் தாலுகா அலுவலக பகுதியில் 19; அமராவதி அணைப்பகுதியில் 18 மில்லி மீட்டராக மிதமான மழை பதிவாகியுள்ளது.
தாராபுரம் உப்பாறு அணைப்பகுதியில் 11 மி.மீ., - காங்கயம் தாலுகா அலுவலக பகுதியில் 14; மடத்துக்குளம் தாலுகா அலுவலக பகுதியில் 10; உடுமலை தாலுகா அலுவலக பகுதிகளில் 7.20; வட்டமலைக்கரை ஓடையில் 3.60; வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலக பகுதியில் 3 மி.மீ.,க்கு லேசான மழையும்; திருமூர்த்தி அணை பகுதிகளில் 2 மி.மீ., க்கு மிக லேசான மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக, 18.39 மி.மீ., மழை பெய்துள்ளது.