ADDED : ஜூலை 13, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்;காங்கயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி கூறியதாவது:
காங்கயம் நகரப் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் விதமாகவும், விபத்துகள் இழப்புகளை தவிர்க்கும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் அனைத்து முக்கிய ரோடுகளிலும் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 1877 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 1.07 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகள் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

