/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.1.10 கோடி வழிப்பறி வழக்கு 2 பேர் கைது; ரூ.80 லட்சம் மீட்பு
/
ரூ.1.10 கோடி வழிப்பறி வழக்கு 2 பேர் கைது; ரூ.80 லட்சம் மீட்பு
ரூ.1.10 கோடி வழிப்பறி வழக்கு 2 பேர் கைது; ரூ.80 லட்சம் மீட்பு
ரூ.1.10 கோடி வழிப்பறி வழக்கு 2 பேர் கைது; ரூ.80 லட்சம் மீட்பு
ADDED : மார் 07, 2025 01:50 AM

திருப்பூர்:கரூர் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி, 1.10 கோடி ரூபாய் பறிக்கப்பட்ட வழக்கில், வியாபாரியின் டிரைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, 80 லட்சம் ரூபாயை மீட்டனர்.
கரூர், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை கோவையில் நகை வாங்க கரூரில் இருந்து காரில் சென்றார். ஜோதிவேல், 54, காரை ஓட்டினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சம்பந்தம்பாளையம் அருகே சென்ற போது, இவர்கள் காரை வழிமறித்து நின்ற காரில் இருந்து நான்கு பேர் இறங்கி வந்தனர்.
அவர்கள், தங்களை போலீஸ் என்றும், காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் வந்ததால் காரை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, வெங்கடேஷ் மற்றும் டிரைவரை தாக்கி, 1.10 கோடி ரூபாய் மற்றும் மூன்று மொபைல் போன்களை பறித்து தப்பினர்.
அவிநாசிபாளையம் போலீசார் விசாரித்தனர். கொள்ளை தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கார் டிரைவர் ஜோதிவேலை பிடித்து விசாரித்தனர்.
இதில், ஜோதிவேல் தன் நண்பரான தியாகராஜன், 41, என்பவரிடம் பணத்துடன் வரும் தகவலை கூறியுள்ளார்.
பணத்தை பறிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஜோதிவேல், தியாகராஜன் ஆகியோரை கைது செய்து, 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், 9 பேருக்கு தொடர்புள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.