/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.2 கோடி நிலம் மீட்பு; அறநிலையத்துறை அதிரடி
/
ரூ.2 கோடி நிலம் மீட்பு; அறநிலையத்துறை அதிரடி
ADDED : ஜூலை 02, 2024 05:19 AM

பல்லடம் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி, படேல் வீதியில், நுாறு ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலில் திருப்பணி நடக்கிறது.
இதை முன்னிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, நேற்று காலை, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவிலை பராமரித்து வந்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த, 8.36 சென்ட் இடத்தில் கட்டடம் கட்டி சிலர் குடியிருந்து வந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த சூழலில், ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே முன்வந்து அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
'அவகாசம் கொடுக்கப்பட்டு காலக்கெடு முடிந்து விட்டது. இதனால், போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை மீட்டோம். இன்றைய சந்தை மதிப்பின்படி, நிலத்தின் மதிப்பு, 2 கோடி ரூபாய்' என்றனர்.