/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.2 கோடி கடன் மோசடி; ஆசாமி கைது
/
ரூ.2 கோடி கடன் மோசடி; ஆசாமி கைது
ADDED : மே 30, 2024 07:24 PM

திருப்பூர்:திருப்பூரில், 2 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, 10.75 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 62. கடந்த ஆண்டு மே மாதம், இவரிடம், பல்லடம், வேலப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சிவகுமார், 53 என்பவர், 2 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, நில ஆவணம் மற்றும் 10.75 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் கூறியபடி கடன் பெற்றுத்தரவில்லை. ரத்தினசாமி போன்ற பலரிடம் கடன் வாங்கி தருவதாக கூறி, நிலத்தின் ஆவணம் மற்றும் குறிப்பிட்ட தொகையை பெற்று சிவகுமார் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
ரத்தினசாமி திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தென்காசியில் நேற்று சிவகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'கைதான சிவகுமார் திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற இடங்களில் கடன் வாங்கி தருவதாக நில ஆவணங்கள் போன்றவற்றை பெற்று பல லட்சங்களை பெற்று மோசடி செய்தார். இவர் மீது பல வழக்கு உள்ளது. ஏற்கனவே வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் தலைமறைவாகி விட்டார். இவரை தற்போது கைது செய்துள்ளோம்'' என்றனர்.