/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் அத்துமீறல்: 2 வாலிபர்கள் கைது
/
சிறுமியிடம் அத்துமீறல்: 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 01, 2024 11:49 PM
திருப்பூர்;காங்கயத்தில், 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, வாலிபர் இருவரை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
காங்கயத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த, 25ம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீட்டுக்கு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். 27ம் தேதி இரவு சிறுமி வீட்டுக்கு திரும்பினார். அவரிடம் பெற்றோர் விசாரித்தனர்.
அதில், பணி நிமித்தமாக மைக்கேல், 24 என்பவரின் வீட்டுக்கு சென்றார். சிறுமியிடம் அவர் அத்துமீறி நடந்தார். இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது என மிரட்டினார். இதுகுறித்து சிறுமி காதலித்து வரும் ஜெரின், 23 என்பவரிடம் தெரிவித்தார்.
இதனால், சிறுமியை வாலிபர் தனது சித்தி வீட்டுக்கு அழைத்து சென்றார். அன்றிரவு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மறுநாள் சிறுமியை அழைத்து கொண்டு உடுமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில் சிறுமியை திருமணம் செய்தார். இதையறிந்து, உறவினர் வீட்டில் சத்தம் போடவே, சிறுமியை திரும்ப அழைத்து கொண்டு காங்கயம் வந்தது தெரிந்தது. காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் மைக்கேல் மற்றும் ஜெரின் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.