/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
9 அடி உயர கொடுவாள், ஈட்டியுடன் 20 அடி உயரத்தில் மகாமுனி சிலை
/
9 அடி உயர கொடுவாள், ஈட்டியுடன் 20 அடி உயரத்தில் மகாமுனி சிலை
9 அடி உயர கொடுவாள், ஈட்டியுடன் 20 அடி உயரத்தில் மகாமுனி சிலை
9 அடி உயர கொடுவாள், ஈட்டியுடன் 20 அடி உயரத்தில் மகாமுனி சிலை
ADDED : மே 31, 2024 01:19 AM

அவிநாசி;அவிநாசி அடுத்துள்ள ஆகாசராயர் கோவில் நுழைவுவாயிலில் ஏழு அடி உயர கொடுவாள் மற்றும் ஈட்டியுடன் இருபது அடி உயரத்தில் மகாமுனி சிலை
உருவாகிவருகிறது.
அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில், பழமை வாய்ந்த ஆகாச ராயர் கோவிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் நுழைவுவாயிலில் இருபது அடி உயரத்தில் மகா முனி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களாக, ஸ்தபதிகள் சிலையை வடிவமைத்துள்ளனர்.
இன்னும் இரு வாரங்களில் சிலை முழு வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டு வண்ணங்கள் தீட்டி சிலை முழுமை பெறும் என தெரிவித்தனர்.
காவல் தெய்வமான மகா முனியின் கைகளில் வைத்திருக்கும் கொடுவாளையும், ஈட்டியையும் பிரம்மாண்டமாக இரும்பில் வார்த்துள்ளனர்.
முப்பது கிலோ எடையில் ஒன்பது அடி உயரத்தில் கொடுவாளும், 10 கிலோ எடையில் ஒன்பது அடி உயரத்தில் ஈட்டியும் செய்துள்ளனர்.
மகாமுனியின் கைகளில் வைப்பதற்காக கொடுவாளையும் ஈட்டியையும் அதே பகுதியில் வசிக்கும் சமையல் கலைஞரான சந்திரன் என்பவர் உபயம் செய்துள்ளார்.