/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
200 போதை மாத்திரை; ஆறு வாலிபர்கள் கைது
/
200 போதை மாத்திரை; ஆறு வாலிபர்கள் கைது
ADDED : செப் 05, 2024 12:45 AM
திருப்பூர் : திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை புழக்கம் தொடர்பாக போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் கண்காணிப்பையும் மீறி, வெளி மாநிலங்களில் இருந்து ரயில், பஸ், கூரியர் மூலமாக கடத்தி வருகின்றனர். சமீப காலமாக, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. முறைகேடாக வழங்கும் மெடிக்கல் கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இச்சூழலில், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கூரியர் மூலம் திருப்பூருக்கு வரக்கூடிய பார்சல்களில் போதை மாத்திரை கடத்தல் குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூரியர் மூலம் போதை மாத்திரை பார்சலை போலீசார் கைப்பற்றினர். அதிலிருந்த, 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக, திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், 22, அசோக், 20, அலெக்ஸ், 20, அபுதாகீர், 24, பாஸ்கர், 21 மற்றும் கலைவாணன், 24 ஆகியோரை கைது செய்தனர். பார்சலில் வரும் மாத்திரைகளை பெற்று போதைக்கு பயன்படுத்தி வந்ததும், மற்றவர்களுக்கு சப்ளை செய்ததும் தெரிந்தது.