/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துப்பாக்கி சுடும் போட்டி 250 வீரர்கள் பங்கேற்பு
/
துப்பாக்கி சுடும் போட்டி 250 வீரர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 25, 2024 11:01 PM

திருப்பூர்:வெள்ளகோவில், லக்கமநாயக்கன்பட்டி அடுத்த ஆண்டிபாளையத்தில், மாநில துப்பாக்கி சுடும் போட்டி நேற்றுமுன்தினம் துவங்கியது.
மாநில துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன், கொங்கு நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் நடத்தும் இப்போட்டியை அமைச்சர் சாமிநாதன், எஸ்.பி., அபிேஷக் குப்தா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாநில துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன் தலைவர் சீதாராமராவ், செயலாளர் வேலுசங்கர், கொங்குநாடு துப்பாக்கி சுடுதல் கிளப் செயலாளர் லோகேஸ்வரன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரும், 30ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் அசோசியேஷன், துப்பாக்கி சுடும் பயிற்சி அமைப்புகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 'ட்ராப்', 'டபுள் ட்ராப்', 'ஸ்கீட்' உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
--
வெள்ளகோவில் அடுத்த ஆண்டிபாளையத்தில் மாநில துப்பாக்கி சுடும் போட்டியை மாவட்ட எஸ்.பி., அபி ேஷக் குப்தா துவக்கி வைத்தார்.