ADDED : ஆக 22, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலை ஊராட்சியில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டார்.
சிவன்மலை ஊராட்சி எருக்கலங்காட்டுப்புதுாரில் சிவன்மலை, பொத்தியபாளையம், பாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வரின் கிராம ரோடுகள் மேம்பாட்டு திட்டம், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 3.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ், தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் மகேஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.