ADDED : ஜூன் 07, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அருகே கந்தம்பாளையம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஒடிசாவை சேர்ந்த களந்திரிபத்ரா 28, என் பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, அவிநாசி அருகே பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.