/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமையின் எல்லை அதிகரிக்க 3 லட்சம் மரக்கன்று இலக்கு
/
பசுமையின் எல்லை அதிகரிக்க 3 லட்சம் மரக்கன்று இலக்கு
பசுமையின் எல்லை அதிகரிக்க 3 லட்சம் மரக்கன்று இலக்கு
பசுமையின் எல்லை அதிகரிக்க 3 லட்சம் மரக்கன்று இலக்கு
ADDED : மே 26, 2024 02:23 AM

திருப்பூர்: பருவமழையை அறுவடை செய்யும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்கும் பணி முன்கூட்டியே துவங்கியுள்ளது.
திருப்பூர் வெற்றி அமைப்பு, பல்வேறு பசுமை அமைப்புகளுடன் கரம் கோர்த்து, 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்க்கும் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது.
கடந்த, 2015ல் துவங்கி, 2023ம் ஆண்டு வரை, ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான பராமரிப்பு காரணமாக, 95 சதவீத கன்றுகள், மரமாக வளர்ந்துள்ளன; குறிப்பாக, முதல் மூன்று திட்டங்களில் உருவாக்கிய மரங்கள், குறுங்காடுகளை போல் வானுயர வளர்ந்துள்ளன. இதன்காரணமாக, மரம் வளர்க்கும் இடங்களெல்லாம், பல்லுயிர் பெருக்க சூழலை உருவாக்கியுள்ளன.
முன்கூட்டியே துவங்கியது!
பத்தாவது திட்டத்தை துவக்க, கடந்த சில மாதங்களாக இரண்டு லட்சம் மரக்கன்று தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. கோடை மழை கருணை காட்டியதுடன், தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்கிவிட்டது. இதனால், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டமும் துவங்கி விட்டது.
அவிநாசி, திருப்பூர், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலை என, மாவட்டத்தின் நான்கு திசைகளிலும், பசுமைப்படை, மீண்டும் களப் பணியில் இறங்கிவிட்டது. ஏற்கனவே பதிவு செய்துள்ள இடங்களில், மரம் வளர்க்கும் பணி ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பல்லடம் தாலுகா, முத்தாண்டிபாளையம் கிராமம், கே.அய்யம் பாளையம் அடுத்துள்ள, அப்ப நாயக்கன் தோட்டத்தில், நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
நில உரிமையாளர்கள், மூர்த்தி, கவிதா, பிரனிதா, கீர்த்திக்கண்ணா, விஜயகுமார், கவுரி, மகிழ்சர்வின் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர்.
குடும்பத்தில் உள்ள, குழந்தைகள், சிறுவர்கள் கையால் மரக்கன்று நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது. தேக்கு - 50, சந்தனம் - 100, மகாகனி - 950, செம்மரம் - 50, எலுமிச்சை - 30 என, 1,180 மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், காலியிடங்களில் மரம் நட்டு வளர்க்க விரும்புவோர், தொழிற் சாலைகள், விவசாயிகள் தொடர்புகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.