/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
31ம் ஆண்டு துவக்க விழா: ம.தி.மு.க., கொண்டாட்டம்
/
31ம் ஆண்டு துவக்க விழா: ம.தி.மு.க., கொண்டாட்டம்
ADDED : மே 06, 2024 11:28 PM
பல்லடம்:பல்லடம் அடுத்த அருள்புரத்தில், ம.தி.மு.க., 31ம் ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு, அருள்புரம் தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தன. ஒன்றிய கவுன்சிலர் ரவி தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் மணி, முன்னாள் எம்.பி., கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு வழங்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, முத்துசாமி, அப்புசாமி மற்றும் நிர்வாகிகள் பழனிசாமி, பாலு, கிருஷ்ணன், அர்ஜுனன் உட்பட பலர் பங்கேற்றனர். வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.